#Avalvikatan #Tradition <br /><br />Subscribe Link : https://bit.ly/2DUXIQK<br /><br />இந்த வீடு கட்டப்பட்டு, 222 ஆண்டுகள் ஆகின்றன. இந்த வீட்டின் கதவுகள் ஒரு முறைகூட பூட்டப் பட்டதே இல்லை என்பது ஆச்சரியம் தானே. தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி கிராமத்தில் அமைந்துள்ளது இந்த அதிசய வீடு. பூட்டப்படக்கூடாது என்பதற்காகவே இந்த கதவுகளில் தாழ்ப்பாள்கள் அமைக்கப்படவில்லை. பின்புற கதவுகளிலும் கூட தாழ்ப்பாள் இல்லை. இந்த வீட்டின் குடுடும்ப உறவுகள் யாரேனும் எப்பொழுதும் வசித்துக் கொண்டே இருக்க வேண்டும்... ஒரு கனப்பொழுது கூட, ஆள் அரவம் இன்றி வெறிச்சோடி கிடக்கக் கூடாது என்ற நோக்கத்தின் காரணமாகவே, இந்த வீட்டின் கதவுகள் தாழ்ப்பாள் இன்றி அமைக்கப்பட்டுள்ளது. இரு நூற்றாண்டுகள் கடந்த பிறகும் கூட, இந்த வீடு உயிர்ப்புடன் இருப்பது கூடுதல் சிறப்பு.